திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபயணம் நடைபெற்றது. அப்போது 10 வயது சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் காவல்துறை அலட்சியத்தை கண்டித்து அவர் பேசினார். முதலமைச்சர் ஸ்டாலின் நிர்வாகத்திறனற்றவர் என விமர்சனம் செய்தார். மேலும், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தையும் கடுமையாக எதிர்த்து அவர் பேசினார். இந்த நிகழ்வில் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.