திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் செய்தியாளர் சந்திப்பு

திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் செய்தியாளர் சந்திப்பு: தமிழ்நாட்டை பல வழிகளில் மத்திய அரசு வஞ்சிக்கிறது மொழியை வைத்து பாரபட்சம் காட்டுவது தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது அண்ணாமலை தலைகீழாக நின்றாலும் அவரின் பொய் புரட்டுகள் தமிழக மக்கள் விரும்பாத விஷயம். அகங்காரத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

அண்ணாமலை பேசுவது எண்டர்டெயின்மெண்ட். அண்ணாமலைக்கு பொய் சொல்வது அவரது அரசியல். பொய் சொல்லி மக்களிடம் செல்வாக்கை பெற்று விடலாம் என்பது அவருடைய அரசியல். என்றும் அண்ணாமலைக்கு தமிழ் மக்கள் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள். அவருக்கு ஓட்டு கூட விழாது என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெறுப்பை உண்டாக்கும் விதமாக செயல்படுகிறார். ஆந்திர துணை முதல்வர் அண்ணாமலை புதிதாக முளைத்த பாஜகவினர். மோடியை சந்தோஷப்படுத்த எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். 

100 நாள் திட்ட பணிக்கு 3 மாதங்களாக மத்திய அரசு பணம் வழங்கவில்லை என்றும் மைனாரிட்டி எஸ்சி எஸ்டி மக்களுக்கு இரண்டு ஆண்டுகளாக ஸ்கொலர்ஷிப் வழங்குவதில்லை என்றும் அராஜகமான அரசை மத்திய அரசாங்கம் நடத்துவதாகவும் மரியாதை நிமித்தமாக தான் வரி கட்டுகிறோம். அதை திருப்பித் தர மாட்டோம் என கூறுவதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூட இடமில்லை என்றும் மக்கள் விரைவில் அவர்களை கில்லி எறிவார்கள் என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி