திருவள்ளூர்: டாக்டர் வேடத்தில் இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு

பெரியநத்தம் கிராமத்தில், ராஜு-சுஜாதா தம்பதியினரின் வீட்டில், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி வந்த இரு மர்ம நபர்கள், சுஜாதாவின் 4.5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். தங்களை ஆந்திராவில் இருந்து வந்த சிறப்பு மருத்துவர்கள் என்றும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதாகவும் கூறி வீட்டிற்குள் நுழைந்த இவர்கள், இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி