இந்த நிலையில் அந்தப் பேருந்தில் பயணிக்கும் சில மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியவாறும் பேருந்தின் மேற்கூரை மீது ஏறியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர். அதேபோல் கால்களை சாலையில் தேய்த்தபடியும், தாளம் போட்டபடி ஆபாச பாடல்களையும் பாடி வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவிகளும், பேருந்து பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க பேருந்து பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.