தாம்பரம் அருகே நடைபெற்ற தமிழக வில்வித்தை கூட்டமைப்பின் போட்டியில், கும்மிடிப்பூண்டி குயிக் ஸ்பேரோ வில் வித்தை பயிற்சி மைய மாணவி தவ்ஷிகா தஸ்னீம் 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஜூனியர் இந்திய வில்வித்தை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இவர், டிசம்பர் மாதம் அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற உள்ள தேசிய வில்வித்தை போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க உள்ளார். இப்போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 1500 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.