கும்மிடிப்பூண்டி: தேர்வில் முதலிடம் பெற்ற மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த கபரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவன் அபிலாஷ், தேர்வு முடிவுகள் வெளிவரும் சில நாட்களுக்கு முன்பு பண்பாக்கம் ஏரியில் குளிக்கச் சென்றபோது நீச்சல் தெரியாமல் மூழ்கி உயிரிழந்தார். நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் அவர் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தது தெரியவந்தது. இந்தச் செய்தி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி