திருவள்ளூர் அருகே புட்லூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் மீது மர்ம நபர்கள் கல் வீசியதில், ஜன்னலோரம் நின்றுகொண்டிருந்த 6 வயது சிறுவன் நிஷாந்த் தலையில் பட்டு படுகாயமடைந்தான். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுப்புராஜ் என்பவர் தனது மகனுடன் அரக்கோணம் செல்லும் ரயிலில் பயணித்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.