கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், தமிழக அரசு கட்டிக்கொண்டு வரும் 198 வீடுகளை தமிழக சிறுபான்மை மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் ஆய்வு செய்தார். வீடுகள் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு இலங்கை தமிழருக்கு ஒப்படைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பிரதாப், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன், திமுக மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.