வரலாற்று துறை தொல்லியல் மரபு மன்றம் நடத்தும் கருத்தரங்கம்

பொன்னேரி பகுதியில் உள்ள தொல்லியல் இடங்களை பாதுகாப்பது மற்றும் அதன் வரலாற்று முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தொல்லியல் மரபுத்துறை மன்ற இணை பேராசிரியர் மாறவர்மன் வரவேற்புரை நிகழ்த்தினார். முதல்வர் முனைவர் மாசா தில்லைநாயகி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. தமிழ்நாட்டின் தொல்லியல் சுவடுகள் குறித்த சிறப்புரைகளை முனைவர் வெங்கடேஷ்வரன் மற்றும் மாவட்ட தொல்லியல் அலுவலர் ரா. காவியா ஆற்றினர். ஆற்றம்பாக்கம் கிராமத்தில் ஆதி தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் மற்றும் கீழடி ஆய்வுகள் குறித்து விளக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி