கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி சீல் வைக்கப்பட்டு கோவில் மூடப்பட்ட நிலையில் இன்று (செப்.16) திறக்கப்பட்டு அபிஷேகம் நடத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் முன்னிலையில் கிராம மக்கள் இணைந்து வழிபட அறிவுறுத்தினர்.
பட்டியலில் இன மக்கள் மற்றொரு தரப்பினர் இணைந்து பிரச்சனை ஏற்படாமல் கோவில் வழிபாடு நடத்த பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டது.
கோவிலுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தருவதாக அவர் கிராமமக்களுக்கு உறுதியளித்து பின்னர் கோவில் பூஜையில் பங்கேற்றார்.
மாரி அங்கம்மாள் என்ற 2பெண்கள் மீது சாமி வந்து ஆடியாதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவிலுக்கு மதில் சுவர் சாலை குடிநீர் இரண்டு சுடுகாடு பாதை இரண்டு தரப்புக்கும் காரியம் மேடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய 78லட்சம் ருபாய் ஒதுக்கப்படும் என ஆட்சியர் பிரபு சங்கர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.