கும்மிடிப்பூண்டி: கிராம உதவியாளர் சங்கத்தினர் சாலை மறியல்.. 50 பேர் கைது

காலமுறை ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர் சங்கத்தின் கும்மிடிப்பூண்டி கிளை சார்பில் கும்மிடிப்பூண்டியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டன் கண்டன உரையாற்றினார். இதனையடுத்து, 50க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர். இந்த போராட்டம் காலமுறை ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி