திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று (டிசம்பர் 2) ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் ஒரு மணிநேரத்திற்குள் அதனை வாபஸ் பெற்று, ஆரஞ்சு அலர்ட்டாக சென்னை வானிலை ஆய்வு மையம் மாற்றியது. டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து இன்று (டிசம்பர் 2) நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.