ஆனால் முறையான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், ஏடூர் கிராமத்தில் வசித்து வந்த சுரேஷ் (46) என்பவர் தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 31ம் தேதி கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர், அன்றைய தினமே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த கிராம மக்கள் தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற இயலாத சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே ஏடூர் ஊராட்சியில் அரசு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்