இதில் தேர்ச்சி பெற்ற கைதிகள் மூலம் தயாரிக்கப்படும் ஆடைகள், நொறுக்குத் தின்பண்டங்கள், காகித கழிவுகளை மறுசுழற்சி செய்து அதன் மூலம் அட்டை ஆவண கோப்புகள் தயாரித்து விற்பனைக்காக வெளிச்சந்தைக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை சிறைநிர்வாகம் தண்டனைக் காலம் முடிந்து வெளியில் செல்லும் சிறைவாசிகளின் எதிர்கால நலனுக்காக வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிறைச்சாலைக்குள் ஆவணக்கோப்புகள் தயாரிக்கும் கிடங்கின் ஒரு பகுதியில் பற்றிய தீ காற்றின் வேகத்தால் பரவி அங்கு குவித்து வைத்திருந்த காகித கழிவுகள் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் ரசாயனம் கலந்த தண்ணீரை பீச்சி அடித்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து தொடர்பாக புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.