ஊத்துக்கோட்டை: தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு. 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் கிராமத்தில் வாடகை வீடு எடுத்து நண்பருடன் தங்கி தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழில்பேட்டையில் உள்ள வீல்ஸ் இந்தியா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள பட்டாபி புரத்தைச் சேர்ந்த சத்யம் என்பவரின் மகன் பிரசாந்த் (21) இரவு முழுக்க செல்போனில் தன்னுடன் பழகி வந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென காலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை காவல் துறையினர் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்து உடன் தங்கியிருந்த நபர் மற்றும் அருகில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி