திருவள்ளூர்: மீனவ மக்களுடன் பொங்கல்: ஆளுநர் பங்கேற்பு

சட்டமன்ற மற்றும் பாராளுமன்றத்தில் மீனவ சமுதாய மக்களுக்கு போதுமான பிரதிநித்துவம் பெறவில்லை என மீனவ பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பேச்சு.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே மேல் அவுரிவாக்கம் மீனவ கிராமத்தில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்றார். மாலை 4 மணிக்கு வந்த அவர் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்தார். வெள்ளை சட்டை, பட்டு வேட்டி அணிந்து வந்தார். மீனவ பெண்கள் 64 பானைகளிலும், ஆளுநர் ஒரு பானை என 65 பானைகளில் பொங்கலிட்டனர். பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் ஆளுநர் ரவி வழிபாடு செய்தார். இங்கு நடந்த பொங்கல் விழாவில் முதலில் தேசிய கீதம் பாடப்பட்டு, அடுத்ததாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்தவிழாவில் பரதம், சிலம்ப கலை உள்ளிட்டவை நிகழ்த்தப்பட்டன. மீனவ பெண்கள் கும்மி அடித்து கொண்டாட்டினர். கும்மி அடித்து பாட்டு பாடிய மீனவ பெண்களுக்கு ஆளுநர் கும்மி கூடையில் ₹1000 பொங்கல் இனாம் வழங்கினார். கும்மி அடித்து பாட்டு பாடிய மீனவ பெண்களுக்கு ஆளுநர் ரவி பொங்கல் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, அனைவருக்கும் வணக்கம், இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தமிழில் கூறினார்.

தொடர்புடைய செய்தி