திருவள்ளூர் மாவட்டத்தில் களைகட்டிய பொங்கல் திருநாள்

பொன்னேரி கும்மிடிப்பூண்டி பகுதியில் பொங்கல் பண்டிகை விற்பனை கூட்டம் அலைமோதியது. பொங்கல் விழாவை முன்னிட்டு புத்தாடை, கரும்பு, பொங்கல் பானைகளை வாங்கிச் சென்று வீடுகளில் பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர். 

பொங்கல் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடி, பூண்டி கடைவீதிகளில் பொதுமக்கள் புத்தாடைகளை வாங்கவும், கரும்பு பொங்கல் பானைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்று பொங்கல் விழாவை தங்கள் வீடுகளில் சிறப்பாக கொண்டாட திரண்டு வந்து வாங்கிச் செல்வதால் பொங்கல் பொருட்கள் விற்பனைக்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வருகின்றனர். 

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதியில் ஆங்காங்கே மழை பெய்த போதிலும் பொங்கல் பொருட்கள் விற்பனையானது தொடர்ந்து இன்றும் சிறப்பாக நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி