இந்நிலையில், குறிப்பாக மண் அள்ளும் நபர்கள் ஏரியிலிருந்த 30-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வேருடன் பிடுங்கி எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மண் அள்ளிக்கொண்டு திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலைக்கு வாகனங்கள் வரும்போது அதிகப்படியான தூசிகள் வளர்வதால் அங்கே வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டி செல்ல முடியாத ஒரு நிலை உருவாகியுள்ளது.
மண் அள்ளப்படும் இடத்தில் அரசு சார்பில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான துறை அலுவலர்கள் ஒருவரும் இல்லாத நிலையில் அதிகமாக மண் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இதைப்பற்றி சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினால் உரிய பதில் அளிக்க மறுப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் வேல்முருகன் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
30 அடிக்கும் மேல் மண் எடுப்பதால் விவசாயம் முற்றிலும் பாதிக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.