ஓடைக்கால்வாயில் தனியார் நிலத்திற்கு சிறுபாலம் கட்ட எதிர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் 3 கிமீ நீளமுள்ள ஓடைக்கால்வாய் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கொக்குமேடு பகுதியில் ஓடைக்கால்வாயில் புதியதாக தனியார் நிலத்திற்கு சிறுபாலம் அமைக்கும் பணி நடைபெறுவதை கண்டித்து குடியிருப்புவாசிகள் முற்றுகையிட்டனர். அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளுக்கு துணை போவதாகவும், இதனால் மழைக்காலங்களில் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் குற்றம் சாட்டினர். உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாகவும், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி