திருவள்ளூர்: முதலமைச்சரை புகழ்ந்து பேச்சு

பொன்னேரியில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 'வெள்ளூர் பெண்கள்' என்ற தலைப்பில் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோருக்குப் பிறகு சுயம்புவாக தோன்றியவர் என்றும், திமுக ஒரு இரும்புக்கோட்டை என்றும், அதை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்றும் கூறினார். மேலும், 10 பேர் கூடினால் முதலமைச்சர் ஆகிவிட முடியாது என தமாகா தலைவர் விஜய்க்கு மறைமுகமாக பதிலடி கொடுத்தார்.

தொடர்புடைய செய்தி