திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பெரும்பேடு கிராமத்தில், 20 வயதான கௌசல்யா சமையலறையில் தவறி விழுந்து இறந்ததாக அவரது கணவர் ராஜேஷ் கூறியுள்ளார். ஆனால், பெண்ணின் தந்தை சந்தேகமடைந்ததால், பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜேஷுக்கு வேறு பெண்ணுடன் இருந்த கள்ளக்காதலுக்கு கௌசல்யா இடையூறாக இருந்ததால், அவரை கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்பலமானது. இதனையடுத்து, கணவர் ராஜேஷ் மற்றும் அவரது கள்ளக்காதலி தீபிகா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.