அம்பத்துார் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் சூர்யபிரகாஷ், கும்மிடிப்பூண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த கார் மோதி படுகாயமடைந்து உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.