திருத்தணி அருகே, மதுபோதையில் வந்த வாலிபர் ஒருவர், 'ஓசி'யில் மது கேட்டபோது மறுத்ததால், டாஸ்மாக் விற்பனையாளரை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் கே.ஜி. கண்டிகை பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் நிகழ்ந்தது. விற்பனையாளர் சேகர் அளித்த புகாரின் பேரில், திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து, ஊழியரை தாக்கிய சூர்யா என்பவரை நேற்று (ஜூன் 3) கைது செய்தனர்.