திருத்தணி அருகே பொன்பாடி பேருந்து நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், பைக்கில் 30 மதுபாட்டில்களை கடத்திய சின்னராசு(32) என்பவரை கைது செய்தனர். மத்தூர் டாஸ்மாக் கடையில் வாங்கி அதிக விலைக்கு விற்க முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து பைக் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.