4 நாட்கள் நாக் அவுட் முறையில் நடத்தப்படும் போட்டிகளில் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று காலிறுதி, அரையிறுதி போட்டிகளுக்கு தேர்வாகி இறுதி போட்டியில் வெற்றி வாகை சூடும் அணிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த போட்டிகளில் சிறந்து விளங்கி தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தும் 20 வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பெண்களுக்கான முதல் போட்டியில் தமிழ்நாடு அணியும், கோவா அணிகளும் மோதின. தமிழ்நாடு அணி 25 - 4 கோல்கள் என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு