திருவள்ளூர்: அறிவு சார் நகரம் தேவைதானா; அன்புமணி ராமதாஸ்

விவசாய விளை நிலங்களை அழித்து அறிவுசார் நகரம் தேவைதானா என்றும் அறிவார்ந்தவர்களின் செயல் மக்களையும் மண்ணையும் காப்பது தான் என்று பேசிய அன்புமணி ராமதாஸ் திட்டத்தை வேறு மாவட்டங்களில் மாற்று இடங்களில் திருவண்ணாமலை திருச்சி உள்ளிட்ட இடங்களில் அறிவுசார் நகரம் அமைத்துக் கொள்ளுங்கள் என்றார். மேலும் பெரியபாளையம் சுற்றுவட்டாரங்களில் ஒரு பிடி மண்ணைக்கூட எடுக்க விடமாட்டேன். அறிவுசார் நகரம் அமைக்க தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து போராடுவேன் என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கிராம மக்களிடம் உறுதி அளித்தார். 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மேல்மாளிகைப் பட்டி கிராமத்தில் அறிவுசார் நகரம் அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி விவசாயிகள், பெண்கள், பொதுமக்களுடன் இணைந்து கூட்டத்தில் எதிர்ப்புத் தெரிவித்து அறிவுசார் நகரத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். பாஜக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சியினரும் பங்கேற்றனர். இதில் பாமக பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், அம்பத்தூர் கே.எம். சேகர், வன்னியர் சங்கர் செயலாளர் டில்லி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அன்புமணி ராமதாஸ் திருவண்ணாமலை, திருச்சி போன்ற மாவட்டங்களில் அரசு நிலத்தில் அறிவுசார் நகரம் அமைத்துக் கொள்ளுங்கள் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி