திருவள்ளூர்: பனிப்பொழிவு காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் அவதி

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுப்புற கிராமங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் நிலவியது. காலை 7 மணி வரை நீடித்த இந்த பனிப்பொழிவு காரணமாக, பழவேற்காடு சாலையில் பார்வைதிறன் 500 மீட்டராகக் குறைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை ஓட்டிச் சென்றனர். பனிப்பொழிவு விவசாய தொழிலாளர்களையும், வேலைக்குச் செல்வோர் என பலரையும் பாதித்தது.

தொடர்புடைய செய்தி