திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதன் காரணமாக சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். கடந்த 3 நாட்களாக இப்பகுதியில் கடும் வெயில் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.