அதிக வெயில் மற்றும் அடிக்கடி பெய்து வரும் மழை காரணமாக மாம்பழம் மகசூல் குறைந்துள்ளது. இதனால் மாம்பழத் தோட்டம் வைத்துள்ள விவசாயிகள் மட்டுமின்றி, லீசுக்கு எடுத்து பயிர் செய்து வருபவர்களும் வேதனை அடைந்து வருகின்றனர். மாம்பழ சாகுபடிக்கு தண்ணீர் மற்றும் மிதமான வெயில் உகந்தது. ஆரம்பாக்கம் உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதிக ஆழத்துக்குச் சென்றுவிட்டது. மேலும், வெயிலும் மழையும் மாறி மாறி விளைந்துள்ள மாங்காய்கள் மற்றும் பூக்கள் மீது பட்டு அதன் நிறத்தையும் தன்மையையும் மாற்றியுள்ளது. இதனால் வியாபாரிகள் மக்களிடையே விற்பனை செய்ய முடியாமல் சுவை மிகுந்த ஆரம்பாக்கம், ஏடூர், கும்பிளி, தோக்கமூர் மாம்பழங்களை கிலோ ₹30க்கு கூட விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வேதனை அடைந்து வருகின்றனர்.
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?