ஹான்ஸ் தராத ஆத்திரத்தில் கடைக்கு தீ வைத்த நபர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பூவளம்பேடு கிராமத்தில் சீனிவாசன் என்பவரின் கடையை மர்ம நபர்கள் தீ வைத்ததால் கடையில் இருந்த பொருட்கள், வியாபாரம் செய்து வைத்திருந்த பணம் என முற்றிலும் எரிந்து தீக்கிரையாகியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பாதிரிவேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினர் வியாபாரி சீனிவாசனிடம் விசாரித்ததில் இரவு கடைக்கு வந்த நபர் ஒருவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் போதை புகையிலை பொருளை பணம் கொடுத்து கேட்டுள்ளார். அதற்கு வியாபாரி சீனிவாசன் தனது கடையில் விற்பனை செய்யப்படுவதில்லை என்று கூறியதற்கு ஆத்திரமடைந்த அவர் எதற்கு கடை நடத்துகிறாய் கொளுத்தி விடுகிறேன் என்று கூறிவிட்டு மிரட்டி சென்றுள்ளார். இந்த நிலையில் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில் கடைக்கு மர்ம நபர் தீ வைத்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக சீனிவாசன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி