கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே. சுதர்சனம் கொலை வழக்கில், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2005 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி நள்ளிரவில், வடமாநிலத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கும்பல் சுதர்சனத்தின் வீட்டிற்குள் புகுந்து, அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது. இந்த வழக்கில் ஜெயில்தார் சிங் குறித்த தீர்ப்பு நவம்பர் 24 ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.