தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த சுமார் 98 பேர் சபரிமலை கோவிலுக்குச் சென்றிருந்த நிலையில் இரவு பகலாக ஒரே நாளில் திடீரென ஆட்களைக் கொண்டு செல்போன் டவரை நிறுவப்பட்டது. இதை அறிந்த கிராம மக்கள் சோழியம்பாக்கம் செல்லும் சாலையில் அமர்ந்து உடனடியாக செல்போன் டவரை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கும்மிடிப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது "எங்கள் பகுதியில் செல்போன் டவர் அமைப்பு கூடாது" என மனு கொடுத்தும் அமைத்துள்ளனர் என கூறியுள்ளனர். அதற்கு போலீசார் "இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டு நடவடிக்கை எடுப்பதாக" கூறினர்.
வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு