திருவள்ளூர் மாவட்டம் கண்ணிகை பேரகிராமத்தில் பாரதரத்னா முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுடன் இணைந்து பாஜக மாவட்டத் தலைவர் செந்தில் குமார் நல்லாட்சி தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அறுசுவை உணவு வழங்கியும் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்.
இதேபோன்று கும்மிடிப்பூண்டியில் வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அறுசுவை உணவும் மரக்கன்றுகள் வழங்கியும் பொதுமக்களுக்கு செல்வமகள் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் 25 பேருக்கு வங்கி கணக்கினை துவக்கித் தந்தனர்.