கும்மிடிப்பூண்டி: விவசாயி வீட்டில் 5 சவரன் நகை, பணம் கொள்ளை

கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே மாநெல்லுார் கிராமத்தில் வசிக்கும் ராமு(60) மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி(54) நேற்று மதியம் வங்கிக்கு சென்றபோது, வீட்டில் மறைத்து வைத்திருந்த சாவியை பயன்படுத்தி மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். வீடு திரும்பிய தம்பதியினர், கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பீரோவில் இருந்த 5 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து பாதிரிவேடு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி