திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பாக ஜெயா நகர், செந்தில் நகர், காமாட்சி நகர், காமாட்சி அவென்யூ, டிஎஸ்பி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட நாய்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சமூக ஆர்வலர்கள் சோதனை செய்து பார்த்ததில் இரவு நேரங்களில் பாட்டில்களுடன் வரும் மர்ம நபர் உணவு அளிப்பது பதிவாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதனை சாப்பிடும் நாய்கள் உயிரிழந்து வருகின்றனவா என்றும் இதுகுறித்து திருவள்ளூர் நகராட்சி மற்றும் திருவள்ளூர் நகர காவல் துறையில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் இதுவரை ஒருவரையும் கைது செய்யவில்லை. இந்த நிலையில் திருவள்ளூர் நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் திருட வரும் கும்பலை ஏதேனும் இரவு நேரத்தில் தெரு நாய்கள் தொல்லை கொடுப்பதால் அதை சமாளிப்பதற்கு விஷம் கலந்த உணவை வைத்து செல்கின்றார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.