கும்பாபிஷேகத்தில் மூதாட்டி கழுத்திலிருந்து4சவரன் நகைபறிப்பு.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வரமுக்தீஸ்வரர் ஆலயத்தில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. யாகசாலை பூஜைகள், புனிதநீர் ஊற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட மூதாட்டி சுமதியின் கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இதுகுறித்து சோழவரம் காவல் துறையினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி