ஆரம்பாக்கம்: பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

ஆரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெட்டுக்காடு கிராமத்தில் கந்தன் என்பவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கும் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனப் பரவி வானுயரப் புகை மண்டலம் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து விரைந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி