திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் திருத்தப் படிவங்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தப் பணிகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், பொதுமக்களிடம் படிவங்களை வழங்கி, அதை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு விளக்க அறிவுறுத்தினார்.