அப்போது சான்றிதழை கடையின் மேசை மீது வைத்து காண்பிப்பது போல் வைத்து அங்கிருந்த 2 செல்போன்களை நூதனமாக திருடிக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தனசேகர் அளித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாற்றுத்திறனாளி எனக் கூறி கடையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபரை வலை வீசி தேடி வருகின்றனர். மருந்தகத்தில் கடை ஊழியர்களிடம் லாவகமாக செல்போன்களை திருடும் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?