'நான் அருகே தான் கூலி வேலை செய்து வருகிறேன் எனது குழந்தைகளுக்கு அடிபட்டுவிட்டது. தனது தாய் தந்தை உடல்நிலை சரியில்லை மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்' என பல்வேறு காரணங்களை கூறி யார் யார் என்று தெரியாத மர்ம நபர்கள் செங்குன்றம் சுற்றியுள்ள பகுதிகளில் இதுபோன்று வீடு வீடாக சென்று பணம் கேட்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், இவர்கள் மது போதைக்கு பணத்திற்காக வருகிறார்களா அல்லது வீட்டில் யாரும் உள்ளனரா என நோட்டமிட வருகிறார்களா என புரியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். இதுகுறித்து உடனடியாக செங்குன்றம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு இவர்கள் யார் எங்கிருந்து வந்துள்ளார்கள் என செங்குன்றம் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் துணையோடு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
செங்குன்றம் காவல்துறையினர் இவர்களை உடனடியாக அடையாளம் கண்டு காவல் துறையினர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.