ஊத்துக்கோட்டை: கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்த கார்

சென்னையைச் சேர்ந்த பரத் என்பவர் ஸ்ரீ சிட்டி பகுதியிலிருந்து ஸ்கார்பியோ காரில் ஊத்துக்கோட்டை அடுத்த தொம்பரம்பேடு பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் காரை ஓட்டிச் சென்றதால், கட்டுப்பாட்டை இழந்த கார் ஊத்துக்கோட்டை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில் சாலை ஓரம் இருந்த கூரை வீட்டிற்குள் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஊத்துக்கோட்டை போலீசார், பரத் மற்றும் அவருடன் இருந்த இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி