திருவள்ளூர்: இடிந்து விழும் நிலையில் பாலம்: புதிய பாலம் கட்ட கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் செஞ்சியஅகரம் ஊராட்சியை சேர்ந்த சீனிக்குப்பம் கிராமத்தில் பட்டியல் இனத்தவர் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் உள்ளது. 

இப்பாலம் விரிசல் விட்டு உடையும் அபாயத்தில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். இப்பாலம் பழமை வாய்ந்த பாலமாக உள்ளதால் அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தால் பாலத்தின் மீது வராததால் வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் பாதிக்கப்பட்டவர்களை தூக்கிச் செல்லும் அவல நிலை உள்ளது.

அதுமட்டுமின்றி இறந்தவர்கள் உடல்கள் வந்தால் பாலத்தின் மீது வருவதற்கு ஓட்டுநர்கள் வர மறுக்கிறார்கள். மழைக்காலங்களில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லவும் வரவும் உயிர் பயத்தில் பாலத்தின் மீது செல்கிறார்கள். 

இதனை இடித்து விட்டு புதிய பாலம் கட்டித் தர பலமுறை மனுக்கள் அளித்தும் கோரிக்கை வைத்தும் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி