திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வள்ளியம்மை நகர் பகுதியில் சாலையில் உள்ள பள்ளத்தில் நிலைதடுமாறி கவிழ்ந்து கோவில் திருக்குளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லேசான காயங்களுடன் ஆத்துப்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தேவேந்திரன் மற்றும் அவரது அக்கா சம்பூர்ணம் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அங்குள்ள முருகன் கோவிலில் வழிபட்டு விட்டு வீடு திரும்பிச் சென்ற போது சாலையோரம் பள்ளத்தில் பின்பக்கமாக வந்த போது ஆட்டோ சிக்கி விபத்துக்குள்ளானது. குறிப்பிடத்தக்கது விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கும்முடிபூண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி