திருவள்ளூர்: அன்புமணி ராமதாஸ் நடைபயணம் (VIDEO)

கும்மிடிப்பூண்டி பஜார் வீதியில் நடைபயணத்தை தொடங்கி திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் விஎம் பிரகாஷ் மற்றும் கட்சியின் நிர்வாகிகளுடன் பஜார் வீதி வழியாக சென்று பொதுமக்கள் வியாபாரிகள் விவசாயிகளை சந்தித்தார், பின்னர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில் தமிழகத்தின் உரிமை மீட்க வருங்கால தலைமுறையைக் காக்க நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். 

முதலமைச்சருடன் இருப்பவர்கள் அமைச்சர்கள் அல்ல வியாபாரிகள், திமுக கொடுங்கோல் ஆட்சி போதும் சமூக நீதி பற்றி பேச திமுக முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமை உள்ளதா என்கிற விவாதத்திற்கு வர மாட்டார்கள். 50 ஆண்டுகால ஆட்சியில் இல்லாத நேரடி கடன் சுமையை 9 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக உயர்த்தியது திமுக அரசு. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. நெசவாளர்கள், பொதுமக்கள் கொதித்து போய் உள்ளனர் என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி