திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மடவிளாகம் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா(35) என்பவர், பண்டிக்காவனுார் கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றார். நேற்று முன்தினம் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாததால், அவரது கணவர் ஏசு புகார் அளித்துள்ளார். இது குறித்து பெரியபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.