பொன்னேரி நகராட்சி திருவாயற்பாடி அருகே புளியந்தோப்பு பகுதியில் உள்ள அருள்மிகு ஆனந்த விநாயகர் கோவிலில் பாலமுருகன் சிலை கண் திறந்ததாக தகவல் பரவியது. இது பக்தர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தி, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து தரிசனம் செய்தனர். இந்நிலையில், திருவாடுதுறை ஆதீனம் குரு மஹா சன்னிதானம் அந்த ஆலயத்திற்கு வருகை தந்து ஆலய நிர்வாகியிடம் முருகன் கண் திறந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து, இது உலக அதிசயம் ஏதோ ஒன்று நடக்கப் போவதற்கான அறிகுறி எனத் தெரிவித்தார்.