திருவள்ளூர்: கஞ்சா போதையில் 6 பேருக்கு அரிவாள் வெட்டு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சூரப்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட ராமச்சந்திராபுரம் கிராமத்தில் உள்ள அரசு நிலத்தில் சென்னை திருவெற்றியூர் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. இப்பகுதியைச் சேர்ந்த சிலர் குடியமர்த்தப்பட்ட நாட்களில் இருந்து கஞ்சா விற்பனை, சட்ட விரோத மது பாட்டில்கள் விற்பனை, சண்டை, சச்சரவு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஹரி என்பவர் அந்த பகுதியில் உள்ள கடைக்குச் சென்றபோது அங்கிருந்த ஐந்து பேர் கொண்ட மர்ம நபர்கள் அரிவாளைக் காட்டி செல்போனை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதைத் தட்டிக் கேட்ட ஹரியை அரிவாளால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்த ராமச்சந்திராபுரம் வில்லியர் பகுதியைச் சேர்ந்த அருகில் உறவினர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். அவர்களை வழிமறித்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக தலை, கை, கால், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியுள்ளனர். 

வெங்கடேசன், ரவி, பாலாஜி, வெங்கடேசன், கஸ்தூரியையா ஆகிய 6 பேர் வெட்டுப்பட்ட நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். கிராமத்தில் பதற்றத்தை தணிக்க 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்

தொடர்புடைய செய்தி