கும்மிடிப்பூண்டியில் 24 மணி நேரத்தில் 169 மிமீ மழை: வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு

கும்மிடிப்பூண்டியில் திங்கட்கிழமை காலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை பெய்த 169 மில்லி மீட்டர் மழையால், பஜார் சாலைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலைகளில் தேங்கியுள்ள நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரூராட்சி நிர்வாகத்தினர் மழை வெள்ளத்தை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி