திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய காவல் உட்கோட்டங்களுக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இதுவரை 15 ரவுடிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பழைய குற்றவாளிகள் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபட மாட்டோம் என ஒப்புதல் பத்திரங்களை எழுதி போலீசாரிடம் கொடுத்துள்ளனர்.