கும்மிடிப்பூண்டி: 15 லட்சம் ரூபாய் குடிநீர் தொட்டி வீண்: மக்கள் கொந்தளிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே ஓபமுத்திரம் ஊராட்சியில் 2020-2021 ஆம் ஆண்டில் 15.77 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி, கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை. இது குறித்து மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தப் பயனும் இல்லை. இதனால் வீணாகிப் போன 15.77 லட்சம் ரூபாய்க்கு தமிழக அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி